முன் கட்டிய எலுமிச்சையும்
வியர்வையேறிய ஓட்டுநரும்,
காற்றை ஆட்கொண்ட இளையராஜாவும்,
கன்னிகளின் திரண்ட மார்களும்,
அதை இம்சித்த லாங்சைஸ் நோட்டுகளும்
குழப்பமுற்ற குழந்தையின் மனதும்
கைப்பேசி அலறல்களும்,
ஜன்னல் ஓர காதலும்,
ஏதிலாரின் குறியை சீண்டுபவனும்,
நெடுஞ்சாலை பணிகளும் வட முகங்களும்,
குமட்டல்களும் சன்னல்களும்,
சில்லரை பற்றாக்குறையும் நடத்துனரும்,
படிக்கட்டும் இளைஞனும்,
வான் விரும்பா புகையும், வழித்தடம் தவறி ஏறிய நானும்.
வியர்வையேறிய ஓட்டுநரும்,
காற்றை ஆட்கொண்ட இளையராஜாவும்,
கன்னிகளின் திரண்ட மார்களும்,
அதை இம்சித்த லாங்சைஸ் நோட்டுகளும்
குழப்பமுற்ற குழந்தையின் மனதும்
கைப்பேசி அலறல்களும்,
ஜன்னல் ஓர காதலும்,
ஏதிலாரின் குறியை சீண்டுபவனும்,
நெடுஞ்சாலை பணிகளும் வட முகங்களும்,
குமட்டல்களும் சன்னல்களும்,
சில்லரை பற்றாக்குறையும் நடத்துனரும்,
படிக்கட்டும் இளைஞனும்,
வான் விரும்பா புகையும், வழித்தடம் தவறி ஏறிய நானும்.