Wednesday, 9 July 2014

ஊற்றுக்கண்

அடர்வனத்தில் மிருக கடவுளைக் கண்டேன்
எக்கோணத்திலும் மிருகமாகவே அதில்லை.
சிறகேதுமில்லாத, பட்சிகளின் கடவுளையும்
நீந்தத்தெரியாத, மீன்களின் கடவுளையும்
நிற்கத்தெரியாத, மரங்களின் கடவுளையும் கண்டேன்.
சுள்ளிகளோடு சில கேள்விகளையும் சுமக்களானேன்.

நன்றி நவில்தல்

இவ்வரிகள் கவிதையென்றறியப்பட எழுதியவையல்ல.
இடந்தந்த வெற்றிடத்திற்கு,
கூரையென நிற்க மட்டும் படைத்தவை.