Tuesday, 10 June 2014

அஃறினையான உயர்திணை

என் வருகைக்காக காத்திருக்கும் 
வழித்தடத்திடம் சொல்வதெப்படி?
மார்கழி பின்னிரவொன்றில்
நெடுங்குருத்தின் உயிர் துளிக்கும் சொல்லாமல் 
நான் கடந்து சென்ற மாயத்தை..

வினை

எஞ்சியிருக்கும் மதுவானது சில துளிகளே
தீட்டிய சதியில் மாற்றம் ஏற்படலாம்
பீறிடும் செந்நீரூற்றின் வீச்சம் குறையலாம்
அடுத்த கொலைக்கு யுக காத்திருப்பு நேரலாம்
நாய்களின் அனல் கொலைக்களத்தில் தெறிக்கலாம்.
துளிகள் கோப்பையிலேயே கிடக்கட்டும்,
நாய்களின் நிம்மதிக்காவது.