Thursday, 8 May 2014

விதிகெட்டான்

இவ் ஓட்டத்தில் சிக்கவே கூடாதென நினைக்கையில் 
நானும் ஓடப் போவதாக அறிவிப்பு
இல்லை என்று சொல்ல எத்தனித்தேன், 
அதற்கு முன்பே ஓட துவங்கியிருந்தேன்
பிடிக்கிறது, பிடிக்கவில்லை, பிடிக்கிறது
நிறுத்த சொல்லி அறிவிப்பு
மறுக்கிறேன்.
அதற்கு முன்பே நிறுத்தியிருந்தேன்.
மீண்டும் வேண்டா என நினைக்கையில், 
.
.
நானும் ஓடப் போவதாக ஆங்கொரு அறிவிப்பு !

No comments:

Post a Comment